Advertisment

அயோத்தி தீர்ப்பு குறித்து நிர்மோகி அகாரா கருத்து...

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு வழங்கியுள்ளது.

Advertisment

nirmohi ahara about ayodhya verdict

இந்த தீர்ப்பின்படி, வக்பு வாரியத்திற்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் எனவும், வழக்குக்கு உட்படுத்தப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான அமைப்பை அடுத்த 3 மாதத்தில் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் நிர்மோகி அகாரா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்மோகி அகாரா நிர்வாகி மகந்த் தர்மதாஸ், ‘‘அயோத்தி வழக்கில் எங்கள் மனுவைத் தள்ளுபடி செய்ததால் வருத்தமில்லை. எனினும் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டதால் நாங்கள் சமாதானம் அடைகிறோம்’’ எனக் கூறியுள்ளார்.

Ayodhya babri masjid Ram mandir
இதையும் படியுங்கள்
Subscribe