Skip to main content

"பூமி திருத்தி உண்"... பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒலித்த ஆத்திச்சூடி...

Published on 01/02/2020 | Edited on 01/02/2020

2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

 

nirmala sitharaman speech in budget 2020

 

 

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான நேற்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதனையடுத்து இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது அவையில் பேசிய நிர்மலா சீதாராமன், "துடிப்பான, புதிய பொருளாதாரத்துக்கான வழிவகைகளை உருவாக்க விரும்புகிறேன். மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட்டாக இது இருக்கும். " என தெரிவித்தார். 

அப்போது விவசாயம் குறித்து பேசிய அவர் ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி பேசினார்.  ‘பூமி திருத்தி உண்’ என்ற ஆத்திச்சூடிய குறிப்பிட்ட நிர்மலா சீதாராமன் தமிழகத்தைச் சேர்ந்த பெண் கவிஞர் விவசாயத்தை பற்றி 3 வார்த்தைகளில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று கூறி, விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண் என்ற அதன் விளக்கத்தையும் அவர் அளித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்