Nirmala Sitharaman

Advertisment

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 57 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் தற்போது நடைபெற்றுவரும் நிலையில், கர்நாடகா சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலின்போது கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா உடனிருந்தனர்.

கர்நாடகா சார்பில் இரண்டாவது முறையாக மாநிலங்களவை தேர்தலில் நிர்மலா சீதாராமன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.