Advertisment

தமிழக மரவள்ளி கிழங்கை சர்வதேச அளவில் கொண்டுசெல்ல திட்டம்-நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

 Nirmala Sitharaman announces

இரண்டு மாதங்களில் 74,300 கோடிக்கு உணவு தானியங்கள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.கொள்முதல் நிலையங்கள் குறிப்பாக குளிர்பதன கிடங்குகள் மேம்படுத்துவதற்கு ஒரு லட்சம் கோடி. விவசாயிகளிடமிருந்து ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செயல்பட்டுள்ளது. குறுஉணவு நிறுவனங்களை உருவாக்குவதற்காக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை சர்வதேச அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாய பொருட்களை விளம்பரப்படுத்த பத்தாயிரம் கோடி. இந்தநிதி மூலம் சிறுதானியங்கள் இயற்கை மற்றும்மூலிகை பொருட்களுக்கு விளம்பரம் செய்யப்படும்.இறால் இறக்குமதிக்கான அனுமதி 3 மாதம் நீட்டிப்பு செய்யப்படும்.மீன்வளத்துறை மேம்படுத்துவதற்கு 20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisment

பீமா யோஜனா திட்டத்தில் விவசாயிகளுக்கு நிலுவைதொகையாகவழங்கப்பட்டது 6,400 கோடி. கடல் உள்நாட்டு மீன் பிடிக்கும் பண்ணை, மீன் வளர்ப்பை ஊக்குவிக்க 11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

100% கால்நடைகளுக்கு நோய் தடுப்பு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்திற்காக 13,343 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடைவளர்ப்பு கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 15,000 கோடி.மருத்துவ மூலிகைகளின் சாகுபடிக்காக 4,000 கோடிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூலிகைபயிர் மூலம் 5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனீ வளர்ப்புத் திட்டங்களை ஊட்டுவதற்காக 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தக்காளி, வெங்காயம், உருளைக்கு வழங்கப்படும் போக்குவரத்து மானியம் அனைத்து காய்கறிகள், பழங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. மாநிலங்களுக்கு இடையே விளைபொருட்கள்தடையற்ற வர்த்தகம் நடைபெறும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Nirmala Sitharaman corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe