2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

Advertisment

nirmala sitharaman about gst in budget 2020

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடரின் முதலாம் நாளான நேற்று இருஅவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதனையடுத்து இரண்டாம் நாளான இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அப்போது அவையில் பேசிய நிர்மலா சீதாராமன், " ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின் ஒவ்வொரு குடும்பமும் தங்களது மாத செலவில் சராசரியாக 4 சதவீதத்தை மிச்சப்படுத்தி உள்ளனர். ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாநில அரசுகளுடன் இணைந்து ஜிஎஸ்டி வரி முறையை மத்திய அரசு நேர்த்தியாக செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி செலுத்துவோர் எண்ணிக்கை 60 லட்சம் உயர்ந்துள்ளது.

Advertisment

அதேபோல 2006-2016க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் சுமார் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளனர். இந்த மத்திய பட்ஜெட் 3 முக்கிய நோக்கங்களை கொண்டது. ஒன்று இந்திய மக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட பொருளாதார வளர்ச்சியை முக்கிய நோக்கமாக கொண்டது. இரண்டாவது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவது. மூன்றாவதாக சமூகத்தை பற்றிய அக்கறை கொண்டது. சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதை நோக்கமாக கொண்டது" என தெரிவித்தார்.