Advertisment

பறந்து வந்த கடிதத்துக்கு பதில் சொன்ன நிர்மலா சீதாராமன்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், பெலகாவி, பாகல்கோட்டை,மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அணைகள் நிரம்பி வருகிறது. மேலும் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். அப்போது அவரின் காரை நோக்கி ஒரு பெண் ஒரு கடிதத்தை வீசியுள்ளார். உடனே காரை நிறுத்தச்சொல்லி, காரை விட்டு இறங்கிய நிர்மலா சீதாராமன், அந்த கடிதத்தில் எழுதியிருந்ததை படித்தார்.

Advertisment

f

அதில், வெள்ளத்தில் வீடின்றி தவிக்கும் தனக்கு ஒரு வீடு கட்டு தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. உடனே அந்த பெண்ணை அழைத்து பேசிய நிதியமைச்சர், பிரதமர் மோடியின் வீடு வழங்கும் திட்டம் குறித்து விளக்கி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வீடு கட்டித் தரப்படும் என உறுதி அளித்தார். அந்க பெண்ணிடம் நிர்மலா சீதாராமன் பேசுவதை அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertisment
Nirmala setharaman
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe