ghgffdgfd

Advertisment

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த பொது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், "இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய வான்படை தாக்குதலுக்கும், இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தாக்குதல் முழுக்க முழுக்க புலனாய்வு துரையின் யோசனையாலும், பாகிஸ்தானின் தீவிரவாத அத்துமீறலுக்கான பதிலடியாகவுமே நடைபெற்றது. வான்படை தாக்குதலுக்கும் தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என அவர் கூறினார். அரசு சாரா தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அவர் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.