Advertisment

ரஃபேல் விவகாரம் சூடுப்பிடிக்க...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்...

nirmala seetharaman

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்று கடந்த ஒரு வருடமாக மோடி மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒவ்வொரு முறை ஒன்று பேசி வருகிறார். காங்கிரஸை பாஜக விமர்சிக்க, பாஜக காங்கிரஸை விமர்சிக்க என்று இரு கட்சிகளும் தங்களை விமர்சித்து கொண்டெ இருக்கிறது.

Advertisment

இந்நிலையில், ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃப்ராங்கோயிஸ் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு தீணி போடப்பட்டுள்ளது.

Advertisment

ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் அந்நாட்டு பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது: ஃப்ரான்ஸ் நாட்டின் ரஃபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. ஃப்ரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும், அம்பானி குழுமத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். இதனை தொடர்ந்து ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை கொடுத்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியோ இதை நன்கு விமர்சித்து வருகிறது.

மேலும், இதுகுறித்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது. பிரான்சு அரசு கூறுகையில், “ இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகள் பற்றிய விஷயத்தில் நாங்கள் (ஃப்ரான்சு அரசு) தலையிடவில்லை. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர்விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது மட்டுமே எங்களின் பணி” என்று தெரிவித்துள்ளது.

இதுபோன்று காங்கிரஸுக்கு சாதகமாகவே ரஃபேல் விவகாரத்தில் கருத்துகள் அமைகிறது. காங்கிரஸின் அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் கூட நிர்மலா சீதாராமன் ரஃபேல் விவகாரத்தில் பேசிய ஏழு பொய்கள் என்ற ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டது. இப்படி நடந்துகொண்டிருக்க, நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பாதுகாப்புத் துறை சம்மந்தமாக ஃப்ரான்ஸ் பயணிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை சந்தித்துப் பேசவுள்ளார். இதில் இருநாட்டு பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவது குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

Nirmala Sitharaman rafael corruption
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe