Skip to main content

ரஃபேல் விவகாரம் சூடுப்பிடிக்க...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்...

Published on 25/09/2018 | Edited on 25/09/2018
nirmala seetharaman

 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் பாஜக முறைகேடு செய்துள்ளது என்று கடந்த ஒரு வருடமாக மோடி மீது குற்றச்சாட்டு வைத்து வருகிறார். அதற்கு ஏற்றார் போல், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஒவ்வொரு முறை ஒன்று பேசி வருகிறார். காங்கிரஸை பாஜக விமர்சிக்க, பாஜக காங்கிரஸை விமர்சிக்க என்று இரு கட்சிகளும் தங்களை விமர்சித்து கொண்டெ இருக்கிறது.
 

இந்நிலையில், ஃப்ரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஃப்ராங்கோயிஸ் ஹாலண்டே, ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக அனில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் பரிந்துரை செய்தது என்று கூறியுள்ளார். இதன்மூலம் இந்த சர்ச்சைக்கு தீணி போடப்பட்டுள்ளது.
 

ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் அந்நாட்டு பத்திரிகையில் தெரிவித்துள்ளதாவது: ஃப்ரான்ஸ் நாட்டின் ரஃபேல் ரக போர் விமானம் தயாரிப்பதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. ஃப்ரான்சு நாட்டுக்கு எந்த ஒரு வேறு வாய்ப்பும் வழங்கப்படவில்லை. மேலும், அம்பானி குழுமத்துடன் மட்டுமே இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது என்றார். இதனை தொடர்ந்து ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை கொடுத்துள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியோ இதை நன்கு விமர்சித்து வருகிறது.
 

மேலும், இதுகுறித்து ஃப்ரான்ஸ் அரசு விளக்கம் அளித்துள்ளது. பிரான்சு அரசு கூறுகையில், “ இந்தியாவின் வர்த்தக கூட்டாளிகள் பற்றிய விஷயத்தில் நாங்கள் (ஃப்ரான்சு அரசு) தலையிடவில்லை. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில், தரமான போர்விமானங்களை இந்தியாவுக்கு வழங்குவது மட்டுமே எங்களின் பணி” என்று தெரிவித்துள்ளது.
 

இதுபோன்று காங்கிரஸுக்கு சாதகமாகவே ரஃபேல் விவகாரத்தில் கருத்துகள் அமைகிறது. காங்கிரஸின் அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில் கூட நிர்மலா சீதாராமன் ரஃபேல் விவகாரத்தில் பேசிய ஏழு பொய்கள் என்ற ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டது.  இப்படி நடந்துகொண்டிருக்க, நிர்மலா சீதாராமன் அடுத்த மாதம் பாதுகாப்புத் துறை சம்மந்தமாக ஃப்ரான்ஸ் பயணிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர். அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லியை சந்தித்துப் பேசவுள்ளார். இதில் இருநாட்டு பாதுகாப்பு படைகளை வலுப்படுத்துவது குறித்தும், மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

ஆளே இல்லாத 'ரோட் ஷோ'- அப்செட்டில் பாஜக!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Unmanned 'road show'- BJP in upset

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் வந்திருக்கும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு இடங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து இன்று கோவையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் 'ரோட் ஷோ' நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிக தொண்டர்கள் பொதுமக்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் பாதுகாப்பு பணிகளுக்காக காவல்துறையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். ஆனால் ரோட் ஷோ நிகழ்ச்சி நடைபெறும் கோவை 100 அடி சாலையில் பெரும் வரவேற்பு இல்லாத அளவிற்கு சுமார் 200 பேர் மட்டுமே அங்கு கூடியிருந்தனர். நிர்மலா சீதாராமன் வாகனத்தில் செல்லும் வழியில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டாத நிலையே இருந்தது. பாஜக தலைவர்களின் ரோட் ஷோவுக்கு எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காதது பாஜக கட்சியினருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.