Advertisment

ஹைதராபாத் என்கவுண்டர் குறித்து நிர்பயாவின் தாயார் கருத்து...

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டது குறித்து நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

nirbhaya mother about hyderabad encounter

கடந்த 27ஆம் தேதி ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிஸ் அருகே பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது பாஷா, சிவா, நவீன், சென்ன கேசவுலு என்ற நான்கு பேரை சிசிடிவி கேமரா உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisment

இந்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வந்தநிலையில், இன்று அந்த நான்கு பேரும் காவல்துறையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்ற போது தப்பிக்க முயன்றதால் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிர்பயாவின் தாயார், "4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தவிஷயத்தில் நீதி வழங்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

Nirbhaya priyanka reddy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe