Skip to main content

நிர்பயா குற்றவாளிகள் தூக்கு நிறுத்தி வைப்பு!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020
nirbhaya Case issue

 

 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது. நாளைக்கு கண்டிப்பாக அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அந்த குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத்தண்டனையை இன்று நிறுத்தி வைத்து டெல்லி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

 

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று காலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து பவன் குப்தாவின் வழக்கறிஞர்கள் குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். அந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. கருணை மனு நிராகரிக்கப்பட்டது குற்றவாளிக்கு தெரியப்படுத்த கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதால் 14 நாட்களுக்கு தூக்கிலிட முடியாது. இதன் காரணமாக டெல்லி நீதிமன்றம் தூக்குத்தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் 20 வயது தலித் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Published on 15/12/2023 | Edited on 16/12/2023
Again a Nirbhaya incident; Tragedy of 20-year-old woman in bus

டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்‌ஷய் சிங்கிற்கு டெல்லி திஹார் சிறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி  (20/03/2020) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதேபோன்ற கொடூரச் சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு, உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு 20 வயது தலித் பெண் ஒருவர் பயணித்துள்ளார். இவர் பேருந்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் அமர்ந்திருந்துள்ளார். பேருந்திற்குள் சில பயணிகளும் இருந்துள்ளனர். அந்த சமயம் இந்த கேபினுக்குள் ஆரிப் மற்றும் லலித் என அடையாளம் காணப்பட்ட டிரைவர்கள், ஓடும் பேருந்தில் அந்த பெண்னை இரண்டு டிரைவர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது பெண் கூச்சலிட்டதால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லலித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆரிப்பை பேருந்தில் இருந்த பயணிகள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஆரிஃப் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய லலித்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

யார் இந்த பவன் ஜல்லாட்? நிர்பயா குற்றவாளிகளைத் தூக்கில் போட 80,000 சம்பளமா? வெளிவந்த தகவல்!

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது. டெல்லி திஹார் சிறையில் உள்ள தூக்கு மேடையில் இன்று (20/03/2020) காலை 05.30 மணிக்கு நான்கு குற்றவாளிகளும் தூக்கிலிடப்பட்டனர்.  இதை மாணவியின் பெற்றோர் மட்டுமில்லாமல், நாடு முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். தண்டனை தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும், நிச்சயம் நிர்பயாவின் ஆத்மா சாந்தியடையும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

 

bavan jallat



இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியைச் சேர்ந்த பவன் ஜல்லாட் நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் தண்டனையை நிறைவேற்றினார்.  உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே பவன் ஜல்லாட் டெல்லி திஹார் சிறைக்கு அழைத்து வரப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று (19/03/2020) திஹார் சிறையில் பவன் தூக்குத் தண்டனையை ஒத்திகை செய்து பார்த்தார்.அதன் தொடர்ச்சியாகச் சிறையில் தனி அறையில் தங்கிய பவன் இன்று (20/03/2020) அதிகாலை 03.30க்கு எழுந்து குளித்து முடித்து தண்டனையை நிறைவேற்றினார். 

இதையடுத்து பணியாளர் பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.  நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனிடம் எட்டு மணிலா தூக்குக் கயிறுகளைச் சிறைத்துறை அதிகாரிகள் அளித்தனர். எட்டு கயிறுகளில் நான்கை தேர்ந்தெடுத்த பவன், மீதமுள்ள நான்கு கயிறுகளைத் தேவைப்படின் பயன்படுத்த வைத்து கொண்டார். நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிட பவனுக்கு தலா ரூபாய் 20,000 என ரூபாய் 80,000 ஊதியமாகத் தரப்படுகிறது. மேலும், பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது என்கின்றனர்.