டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திஹார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இதில் முகேஷ் சிங் என்ற குற்றவாளி சார்பில், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பப்பட்டது.

Advertisment

nirbhaya case convict reaches supreme court against presidents decision on mercy petition

அதே நேரத்தில், முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு டெல்லி மாநில அரசு, துணை நிலை ஆளுநருக்கு கடிதம் அனுப்பியது. துணைநிலை ஆளுநரும் இக்கடிதத்தை பரிசீலித்து, கருணை மனுவை நிராகரிக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு பின்னர் இந்த மனு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னர், குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்தார்.

Advertisment

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திஹார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் குடியரசு தலைவர் தனது கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக முகேஷ் சிங் சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.