Skip to main content

6 ஆண்டுகளுக்கு பின் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை...

Published on 16/04/2019 | Edited on 16/04/2019

இந்தியாவிலேயே முழுவதுமாக வடிவமைக்கப்பட்ட நிர்பய் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 

nirbhay missile lauched successfully

 

 

கடந்த 2013ம் ஆண்டு முதல் சோதனை செய்யப்பட்டு வரும் இந்த ஏவுகணை கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி சோதிக்கப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்பத்தில் பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட நிலையில் நேற்று பகல் 11.44 மணிக்கு  நிர்பய் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஒடிசாவின்  சந்திப்பூரில் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராணுவ ரகசியங்களை பகிர்ந்த விஞ்ஞானி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 08/07/2023 | Edited on 08/07/2023

 

drdo scientists military leaked issue chargesheet filed 

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) இயக்குநராக பணியாற்றி வருபவர் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் (வயது 60). இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு இந்திய ஏவுகணைகள் மற்றும் ராணுவ ரகசியங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கடந்த மே 3ம் தேதி கைது செய்யப்பட்டார்.

 

இவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்டுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் முதலில் கருதினர். தொடர் விசாரணையின் மூலம் அலுவலக பணிகளின்போது பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்டுடன் வாட்ஸ்ஆப் வீடியோ கால் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இவர் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வந்து உள்ளார். மேலும் இவரின் இது போன்ற செயல்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று கருதிய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாரால் மும்பை காலாசவுகியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

 

இந்நிலையில் தற்போது இந்திய ஏவுகணைகள் மற்றும் ராணுவ ரகசியங்களை பகிர்ந்துள்ளதாக மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விஞ்ஞானி பிரதீப் குருல்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். மேலும் இவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு கொண்டவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

 

Next Story

பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பு; இந்திய விஞ்ஞானி கைது

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

drdo scientist pradeep kurulkar national security related issue 

 

டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானி ஒருவர் தீவிரவாத தடுப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (DRDO) விஞ்ஞானியாக பணியாற்றி வருபவர் பிரதீப் குருல்கர் (வயது 60). இவர் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் என தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கருதுகின்றனர். மேலும் இதில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானி தனது பதவியை தவறாக பயன்படுத்தி, தகவல்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்து மும்பை காலாசவுகியில் உள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் விஞ்ஞானி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

 

அலுவலக பணிகளின்போது பிரதீப் குருல்கர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜென்ட்டுடன் வாட்ஸ்அப் வீடியோ கால் அழைப்புகள் மூலம் தொடர்பில் இருந்துள்ளார். இவர் தன் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி வந்து உள்ளார். மேலும் இவரின் இது போன்ற செயல்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று தீவிரவாத தடுப்பு பிரிவின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.