Skip to main content

நீரவ் மோடியின் 50 அடி உயர கொடும்பாவியை எரித்து ஹோலி கொண்டாட்டம்!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,600 கோடி மெகா பணமோசடி செய்தவர் நீரவ் மோடி வழக்கு, விசாரணை என எதுவொன்றிலும் சிக்கிக் கொள்ளாமல் கடந்த ஜனவரி மாத தொடக்கத்திலேயே குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.

 

Nirav

 

அமலாக்கத்துறை வழக்கு, வருமான வரித்துறையின் ப்ளூ கார்னர் நோட்டீஸ் மற்றும் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கை என்ற எதைப் பற்றியும் கவலைப்படாமல், தொடர்ந்து வெளிநாட்டு தொழிலைக் கவனிக்கப் போவதாக கடிதம் வழியாகவே தெரிவித்திருக்கிறார் அவர்.

 

நாட்டையை அதிரவைத்த, ஒரு வங்கியை திவாலாகும் நிலைக்குத் தள்ளிய ஒருவரை அரசு சட்டப்படி கைது செய்யாமல் இருக்கிறது. ஆனால், நீரவ் மோடியைத் தான் பிடிக்க முடியவில்லை, அவரது பொம்மையையாவது எரித்துக் கொள்கிறோம் என்ற அளவுக்கு இறங்கியுள்ளனர் மும்பை மக்கள்.

 

ஒவ்வொரு ஆண்டும் ஹோலி தினத்தன்று தீயதை எரிக்கும் வழக்கத்தை வடநாட்டு மக்கள் கொண்டுள்ளனர். அதன்படி, மும்பையில் உள்ள வோர்லி பகுதி மக்கள், நீரவ் மோடியின் 50 அடி உயர கொடும்பாவியை எரித்து 'ஹோலி கா தஹன்' என்ற விழாவைக் கொண்டாடியுள்ளனர். வைரத்தின் மேல் நீரவ் மோடி அமர்ந்திருப்பதைப் போல் இருக்கும் இந்த கொடும்பாவியின் கீழ், ‘பி.என்.பி. ஊழல், வைர கிங்’ என அவர்கள் எழுதியிருந்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீரவ் மோடியின் பங்களா...(வீடியோ)

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறினர்.

 

nirav

 

இங்கிலாந்தில் மறைந்திருக்கும் இவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் ராய்காட் நகரில் அலிபாக் பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் பங்களாவை அம்மாநில அரசு வெடிபொருட்கள் வைத்து இடித்துள்ளது.

33,000 ச.அடி பரப்பளவு உள்ள அந்த பங்களா 100 கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அந்த இடத்தில் பங்களா கட்டப்பட்டுள்ளதால் அது இடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களா இடிக்கப்பட்ட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

 

 

Next Story

உணர்ச்சிவசப்பட்டு இந்திய மக்கள் என்னை அடித்து கொன்றுவிடுவார்கள் - நீரவ் மோடி

Published on 01/12/2018 | Edited on 01/12/2018

 

 

nir

 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நீரவ் மோடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நீரவ் மோடி சார்பில் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் நீரவ் மோடி, "சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக என் மீது கூறப்படும் புகாருக்கு இதுவரை உரிய ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டவில்லை. என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதனால் எனது உருவ பொம்மைகள் கூட எரிக்கப்பட்டன. ஏற்கனவே இந்தியாவில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சிலரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் கூட நடந்துள்ளன. எனவே இதுபோன்று எனக்கும் நேரலாம். இதன் காரணமாகவே நான் இந்தியா வரவில்லை"  என கூறியுள்ளார்.