Published on 25/10/2018 | Edited on 25/10/2018

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷி அதனை திருப்பி தராமல் வெளிநாடு தப்பி சென்றுவிட்டனர். இது தொடர்பாக இவர்கள் மீது முறைகேடு வழக்கை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் இருக்கும் அவருடைய சொத்து மதிப்பில் ரூ. 637 கோடி அமலாக்கத்துறை முடக்கியிருந்தது. தற்போது ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.