Advertisment

உணர்ச்சிவசப்பட்டு இந்திய மக்கள் என்னை அடித்து கொன்றுவிடுவார்கள் - நீரவ் மோடி

nir

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நீரவ் மோடி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் நேரில் ஆஜராக முடியாத சூழ்நிலை உள்ளதால் அவரால் நீதிமன்றத்திற்கு வர முடியாது என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும் நீரவ் மோடி சார்பில் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் நீரவ் மோடி, "சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக என் மீது கூறப்படும் புகாருக்கு இதுவரை உரிய ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டவில்லை. என்னை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. இதனால் எனது உருவ பொம்மைகள் கூட எரிக்கப்பட்டன. ஏற்கனவே இந்தியாவில் மக்கள் உணர்ச்சிவசப்பட்டு சிலரை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் கூட நடந்துள்ளன. எனவே இதுபோன்று எனக்கும் நேரலாம். இதன் காரணமாகவே நான் இந்தியா வரவில்லை" என கூறியுள்ளார்.

Advertisment
PNB pnbfraud niravmodi diamond modi Nirav modi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe