Advertisment

வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்ட நீரவ் மோடியின் பங்களா...(வீடியோ)

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவருடைய உறவினர் மெகுல் சோக்‌ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடி செய்து, இந்தியாவைவிட்டு வெளியேறினர்.

Advertisment

nirav

இங்கிலாந்தில் மறைந்திருக்கும் இவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் ராய்காட் நகரில் அலிபாக் பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் பங்களாவை அம்மாநில அரசு வெடிபொருட்கள் வைத்து இடித்துள்ளது.

33,000 ச.அடி பரப்பளவு உள்ள அந்த பங்களா 100 கோடி மதிப்புள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி அந்த இடத்தில்பங்களா கட்டப்பட்டுள்ளதால் அது இடிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 13,000 கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் பங்களா இடிக்கப்பட்ட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

Nirav modi pnbfraud niravmodi diamond
இதையும் படியுங்கள்
Subscribe