உயிர்கொல்லி நோயான நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கேரளாவில் நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதனைகளுக்கு பிறகு அவருக்கு நிபா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கேரளா மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுக்ஜூரித்து இன்று காலை டெல்லியில் மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து கேரளாவில் நிபா பாதிப்பு குறித்து ஆராய்வதற்காக 6 அதிகாரிகள் கொண்ட குழு கேரளா அனுப்பப்படுவதாக இந்த கூட்டத்தில் முடிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.