பீகார் மாநிலத்தில் நில்கை எனப்படும் காட்டுமாடுகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி வந்துள்ளன. இது குறித்து அரசிடம் முறையிட்ட விவசாயிகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். இது குறித்து முடிவு செய்த அரசு, நில்கை மாடுகளை கொல்வதற்கு ஒப்புதல் அளித்தது. அரசு ஒப்புதல் அளித்ததையடுத்து பீகாரின் வைஷாலி மாவட்டத்தில் மட்டும் 300 நில்கை மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. நில்கை மாடுகளை கொல்வதற்காக பீகார் வனத்துறை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுபவர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது.

Advertisment

இந்த வேட்டையில் காயமடைந்த நில்கை மாடு ஒன்று உயிரோடு புதைக்கப்படும் கோர காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. காலில் காயமடைந்த நில்கை மாட்டை குழி தோண்டி அதில் தள்ளிய ஜேசிபி ஓட்டுவர், அந்த மாட்டின் மீது மண்ணை தள்ளி உயிரோடு புதைத்தார். நில்கை மாடு உயிரோடு புதைக்கப்படும் காட்சிகள் பார்ப்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.