Skip to main content

தங்க கடத்தல் ஸ்வப்னாவின் ஜாமீனுக்கு என்.ஐ.ஏ. கடும் எதிர்ப்பு!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

Gold smuggling beauty Swapna! NIA granted bail Strong opposition!

 

கேரளாவிலுள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தைப் பயன்படுத்தி தங்கக் கடத்தல் நடந்த விவகாரம் கடந்த ஆண்டு கேரளாவை உலுக்கியது. தூதரகத்தில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

 

இந்த வழக்கினை தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரித்துவருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகிவருகின்றனர். கடந்த பிப்ரவரியில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கருக்கு ஜாமீன் கிடைத்தது. ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்டவர்கள் ஓராண்டாக சிறையில் இருக்கின்றனர். அமலாக்கம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் ஸ்வப்னாவுக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால், என்.ஐ.ஏ. எனப்படும் தேசியப் புலனாய்வு அமைப்பு தொடந்த வழக்கில்  ஜாமீன் மறுக்கப்பட்டே வருகிறது.

 

இந்த நிலையில், ஜாமின் வழங்கக் கோரி  மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தை நேற்று (16.07.2021) அணுகினார் ஸ்வப்னா. ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த அவரது மனுவில்,  "என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை முடிவே இல்லாமல் நீடிக்கிறது. விசாரணை என்ற பெயரில் ஒரு வருடமாக சிறையில் இருக்கிறேன். இதே தங்கக் கடத்தல் வழக்குடன் தொடர்புடைய சுங்கத்துறை மற்றும் பணமோசடி வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே என்.ஐ.ஏ. தொடர்ந்த வழக்கிலும் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

வழக்கு விசாரணையின்போது என்.ஐ.ஏ. தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் சரித், ஸ்வப்னா சுரேஷ் ஆகியோர் மிக முக்கியமானவர்கள். கடத்தலின் மூளையாக செயல்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இவர்களின் தங்கக் கடத்தல்களால் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனை நாங்கள் நிரூபித்துள்ளோம். கூட்டுச் சதியிலும் இவர்களுக்குத் தொடர்பிருக்கிறது.  ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 2019 நவம்பர் முதல் 2020 ஜூன் வரை 167 கிலோ தங்கத்தைக் கடத்தியுள்ளனர்.

 

பணப்பரிவர்த்தனைகள் மற்றும் கடத்தல் தொடர்பான ஆதாரங்களைப் பெறுவதற்காக பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இந்த நிலையில், இவர்களை ஜாமீனில் விடுவிப்பது விசாரணையைத் தீவிரமாக பாதிக்கும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிய இடங்களில் ஸ்வப்னாவுக்கு தொடர்புகள் உள்ளன. ஆதாரங்களை அழிக்கவும், சாட்சியங்களைக் கலைக்கவும் வாய்ப்புண்டு. அதனால் ஜாமீன் வழங்கக் கூடாது” என்று கடுமையாக எதிர்த்தனர். இதனையடுத்து ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை ஜூலை 29க்கு ஒத்திவைத்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.