NIA

Advertisment

ஜம்மு காஷ்மீரில் தேசியப் புலனாய்வு முகமை 14 இடங்களில் சோதனை நடத்திவருகிறது. ஜம்மு, ராம்பன், காஷ்மீர் உள்பட 14 இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த பிப்ரவரி மாதம்,லஷ்கர்-இ-முஸ்தபா இயக்கத்தின் தளபதிஹிதாயத்துல்லா மாலிக் ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ஐந்து கிலோஐ.இ.டி (IED) வெடிமருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம், ஜம்மு விமான படைத்தளத்தில்ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில்,ஐ.இ.டி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.