Advertisment

தீவிரவாதிகள் என கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்க நீதிமன்றம் அவகாசம்

ZSc

நேற்று டெல்லி, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய திடீர் சோதனையில் டெல்லியை சேர்ந்த 10 பேர் ஆபத்தான ஆயுதங்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 10 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் 10 பேரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் 5 பேரை மட்டும் நீதிமன்றதினுள்ளேயே குடும்பத்தை சந்திக்க அனுமதியளித்தார் நீதிபதி. கைது செய்யப்பட்ட பத்து பேரிடமிருந்து துப்பாக்கி, வெடிமருந்து, சிறிய ரக ராக்கெட் லாஞ்சர் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

terrorism isis Delhi NIA
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe