/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgjgyjg.jpg)
மேற்குவங்கம் மற்றும் கேரள மாநிலங்களில் ஒன்பது அல்கொய்தா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளைக் குறைக்கும் விதமாக பல்வேறு பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களைக் கைது செய்ய என்.ஐ.ஏ நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை மேற்கொண்டிருந்தது. இதில், கேரளாவின் எர்ணாகுளத்தில் மூன்று பேரும், மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையின்படி,இந்த நபர்கள் அல்கொய்தா பயங்கரவாதிகளால் தூண்டப்பட்டவர்கள் என்றும், பயங்கரவாத திட்டங்களுக்கு நிதி திரட்டுவது மற்றும் தலைநகர் டெல்லி உட்படபல இடங்களில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)