மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சியில் (Neyveli Lignite Corporation India Ltd) ஒரு வருட அப்ரண்டிஸ் பணி 170 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த நிறுவனத்திற்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 12185 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிபதற்கான கல்வி தகுதி : டிப்ளோமா மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் (DIPLOMA MECH,EEE,ECE,CIVIL) உள்ளிட்ட படிப்புகளை 2017/2018/2019 ஆம் ஆண்டு முடித்தவர்களாக இருக்க வேண்டும். அதே போல் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

NLC

இந்த பணியிடங்களுக்கு இணைய தள வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அதற்கான இணையதள முகவரி: http://boat-srp.com/ மற்றும் http://www.mhrdnats.gov.in/ சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 20/05/2019 , கடைசி நாள்: 04/06/2019. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி : http://www.mhrdnats.gov.in/ அணுகலாம். விண்ணப்பிப்பது தொடர்பான உதவிகளுக்கு மின்னஞ்சல் முகவரி : [email protected] அணுகவும் .