Advertisment

காங்கிரஸ் கட்சியில் அடுத்த திருப்பம் - தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக மூத்த தலைவர் அறிவிப்பு! 

'The next turn in the Congress party- I am contesting for the post of president': The senior leader of the Congress party announced the action!

Advertisment

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக அறிவித்த, கட்சியின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்துள்ள நிலையில், தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர்திக் விஜய் சிங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், நாளை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

'The next turn in the Congress party- I am contesting for the post of president': The senior leader of the Congress party announced the action!

இதனிடையே, டெல்லியில் உள்ள இல்லத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவில்லை. சச்சின் பைலட்டை முதலமைச்சராகத் தேர்வு செய்ய தனது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததற்கு சோனியா காந்தியிடம் வருத்தம் தெரிவித்ததாக் கூறியுள்ளார்.

Advertisment

காங்கிரஸ் கட்சிக்குள் அடுத்தடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe