Advertisment

6 முதல் 8 மாதங்களில் அடுத்த கரோனா அலை - மருத்துவ நிபுணர் கணிப்பு!

corona

Advertisment

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. நேற்றைய தினம் 16 ஆயிரத்து 51 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், இன்று 13,405 பேருக்கு கரோனா உறுதியானது. இந்தநிலையில் இந்திய மருத்துவ கூட்டமைப்பின் தேசிய கரோனா பணிக்குழுவின் இணை தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன், 6 முதல் 8 வாரங்களில் அடுத்த கரோனா அலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், “வைரஸ் நம்மை சுற்றி இருக்கப்போகிறது. இன்னொரு புதிய வகை கரோனா மாறுபாடு பரவும்போது ஒரு கரோனா அலை ஏற்படும். அது எப்போது என நமக்கு தெரியாது. ஆனால் ஆறு முதல் எட்டுமாதங்களுக்கு ஒருமுறை புதிய வகை கரோனா பரவுகிறது என வரலாறு கூறுகிறது” என தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் தற்போது அதிகம் பரவி வரும் ஒமிக்ரானின் துணை மாறுபாடு பிஏ.2, இன்னொரு கரோனா அலையை ஏற்படுத்தாது எனவும் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

India pandemic
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe