ADVERTISEMENT

மீண்டும் டிராக்டர் பேரணி - விவசாய சங்க தலைவர் அறிவிப்பு!

10:19 AM Feb 24, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்திய விவசாயிகள், அதனைத் தொடர்ந்து சாலை மறியலிலும், ரயில் மறியலிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள அவர்கள், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை வீட்டுக்குச் செல்வதில்லை என்ற முடிவில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகள், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாவிட்டால், அடுத்த கட்டமாக நாடாளுமன்றத்தை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து ராஜஸ்தானில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் பேசிய ராகேஷ் திகைத், நாடாளுமன்றதை நோக்கி நடத்தப்படும் பேரணியில், 40 லட்சம் டிராக்டர்கள் ஈடுபடுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியே நமது அடுத்த முடிவாக இருக்கும். வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படாவிட்டால் 4 லட்சம் டிராக்டர்கள் மட்டுமல்ல, 40 லட்சம் டிராக்டர்களும் அங்கு செல்லும்" எனத் தெரிவித்துள்ளார். டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT