Advertisment

நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்!

News reader to shed tears live!

கன்னட சினிமா நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு நேற்று (29.10.2021) காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை காலமானார். புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியால் ரசிகர்களும், திரையுலகினரும் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisment

திரையுலகைச் சேர்ந்தவர்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலுக்கு ஏராளமான ரசிகர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். புனித் ராஜ்குமாரின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவுள்ளது.

News reader to shed tears live!

புனித் ராஜ்குமார் மறைந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல், அவரது ரசிகர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் புனித் ராஜ்குமாரின் மறைவு செய்தியை நேரலையில் வாசித்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர்துக்கம் தாளமுடியாமல் நேரலையிலேயே கண்ணீர் விட்டு அழுத வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

incident live news karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe