தான் விருது வாங்க இருப்பதை நேரலையில் வெட்கத்தோடு வாசித்த பெண் செய்தியாளர்... வைரலாகும் வீடியோ!

பெண் செய்தியாளர் ஒருவர் தனக்கு விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை வெட்கப்பட்டு வாசித்த நெகிழ்சியான சம்பவம் கேரளாவில் நடைபெற்றுள்ளது. கேளர மாநிலத்தின் மாத்ருபூமி செய்தி நிறுவனத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றுபவர் ஸ்ரீஜா. அவர் வழக்கம் போல் நேற்று காலை தொலைக்காட்சியில் செய்தி வாசித்துக்கொண்டிருந்தார். அப்போது கேரள அரசின் சார்பாக ஊடக துறையில் பணியாற்றுபவர்களுக்கான விருதுகளை அம்மாநில அரசு அறிவித்தது.

இந்நிலையில் மாநில அரசின் விருது வாங்கியவர்களின் பெயரை அவர் ஒவ்வொருவராக வாசிக்கும் போது அதில் அவருடைய பெயரும் இடம்பெற்றுள்ளது. தனக்கு விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், தன் பெயரை தானே வாசிக்க வெட்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

VIRAL
இதையும் படியுங்கள்
Subscribe