Advertisment

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில்...

புதிய 20 ரூபாய் நோட்டு விரைவில் வெளியாகுமென மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment

rr

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. அதற்கு மாறாக புதிய ரூ 500 மற்றும் ரூ 2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. மேலும் பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 தவிர மற்ற மதிப்புள்ள நோட்டுகள் செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், புதிய 200 ரூபாய், 50 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 100 ரூபாயென படிப்படியாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த வகையில் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிட உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisment

RBI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe