corona

இந்தியாவில் கரோனாவின்இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 3 லட்சம் பேருக்கு கரோனாதொற்று உறுதியானது. கரோனாபரவலை தடுக்க மாநிலங்கள் பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வருகின்றன. மஹாராஷ்ட்ரா, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

இந்தநிலையில், கரோனா பரவலை கட்டுப்படுத்த பஞ்சாப் மாநிலமும் இரவுநேர ஊரடங்கைஅமல்படுத்தியுள்ளது. இரவு 9 மணிமுதல்காலை 5 மணிவரைஅமல்படுத்தப்படவுள்ளஇந்த ஊரடங்கு, ஏப்ரல் 30 வரை நீடிக்கவுள்ளது. மேலும் பொதுக்கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குக்குள்50 சதவீத ரசிகர்களோடு செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல் கரோனா அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக பெங்களூருவில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. அதிக அளவில் மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள் ஆகியவை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று (06.04.2021) கர்நாடகாவில்6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.