முக்கோண வடிவிலான புதிய இந்திய நாடாளுமன்றம்... தயாரான மாதிரி வரைபடங்கள்...

1350 பேர் அமரும் வகையிலான இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்திற்கான மாதிரி வரைபடங்கள் தயாராகியுள்ளன.

new parliament building for india

இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றார் போல நாடளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்து வருகின்றது. இந்த நிலையில் அதற்கேற்ப புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்கான முயற்சியில் பாஜக அரசு இறங்கியுள்ளதாக தெரிகிறது. வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த புதிய கட்டிடம் கட்டப்படும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1,350 எம்.பி.க்களுக்கு இருக்கை வசதி செய்வதற்கு ஏற்றதாகவும், முக்கோண வடிவிலும் இந்த கட்டிடம் அமைய உள்ளதாக தெரிகிறது. இந்த புதிய நாடாளுமன்றத்தின் மாதிரி வரைபடங்களை அகமதாபாத்தை சேர்ந்த எச்.எஸ்.பி. டிசைன் நிறுவனம் தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலேயே இது அமையும் எனவும், இந்திரா காந்தி தேசிய கலை மையம், இட மாற்றம் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.

Parliament
இதையும் படியுங்கள்
Subscribe