Advertisment

புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் விரைவில் அறிமுகம்!

புதிய ஒரு ரூபாய் நோட்டு விரைவில் புழக்கத்துக்கு வர இருப்பதாக மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. தற்போது ஐந்து,பத்து ரூபாய் நோட்டுக்கள் குறைந்த பட்ச ரூபாய் நோட்டுக்களாக புழக்கத்தில் இருந்து வரும் நிலையில், இந்த புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டால் அதுவே மிக குறைந்த பட்ச இந்திய ரூபாய் நோட்டுக்களாக இருக்கும்.

Advertisment

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு ரூபாய் நோட்டுக்கள் இருந்தாலும், இடையில் அது பயன்பாட்டில் இல்லை. தற்போது புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த நோட்டில் பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றது. 9.7 x 6.3 செமீ நீள, அகலத்துடன் இந்த நோட்டு இருக்கும். மேலும் 110 மைக்ரான் மற்றும் 90 ஜிஎஸ்எம் எடை கொண்டதாக அந்த நோட்டுக்கள் இருக்கும். இளஞ்சிவப்பு பச்சை நிறத்துடன், மற்ற வண்ணங்களும் இணைந்து காணப்படுகின்றது. சாகர் சாம்ராட் எண்ணைய் ஆய்வு தளம் மற்றும் 15 இந்திய மொழிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

Advertisment
rupees
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe