Skip to main content

புதுச்சேரி சட்டமன்றத்தில் புதிய முயற்சி! சபாநாயகர் எடுத்த முன்னெடுப்பு! 

 

A new initiative in the Puducherry Assembly! The initiative taken by the Speaker!

 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், பேரவைத் தலைவர் செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது. 

 

பிளாஸ்டிக் தூக்குப் பைகள், குவளைகள், தட்டுகள், குடிநீர் பாக்கெட்டுகள், விரிப்பான்கள், தெர்மாக்கோல் குவளைகள், தெர்மாக்கோல் தட்டுகள், உணவுப் பொருட்களை கட்ட உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கொடி, பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய் மற்றும் ஐஸ்கிரீம், தெர்மாக்கோல் அலங்காரப் பொருட்கள், பிளாஸ்டிக் முட்கரண்டி, சிறிய பேக்கேஜிங் போர்த்திய தாள்கள், இனிப்புப் பெட்டிகள் மற்றும் அழைப்பிதழ் அட்டைகளை சுற்றிய பிளாஸ்டிக் தாள்களை பேக்கிங் செய்தல், பிளெக்ஸ் பேனர் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன.

 

A new initiative in the Puducherry Assembly! The initiative taken by the Speaker!

 

புதுச்சேரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கத்தோடு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 14 வகையான பொருட்களை புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் மே 1 ஆம் தேதி முதல் பயன்படுத்தக்கூடாது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !