new guidelines to use fan and ac

ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள மக்கள், மின்விசிறி மற்றும் ஏ.சி யை பயன்படுத்த சில புதிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Advertisment

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளார். மேலும், இது கோடைக்காலம் என்பதால் வீட்டில் ஏ.சி மற்றும் மின்விசிறியின் பயன்பாடுகள் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மின்விசிறி மற்றும் ஏ.சி- ஐபயன்படுத்த சில புதிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி, வீட்டில் இயங்கும் ஏர் கண்டிஷனரின் (ஏசி) வெப்பநிலை 24- 30 டிகிரி செல்சியஸுக்குள் வைத்திருக்க வேண்டும் எனவும், ஏ.சி.க்களைப் பயன்படுத்தும் போது, ஈரப்பதம் 40-70 சதவிகிதம் வரை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.சிக்கள் இயங்காதபோதும் அறைகள் காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அதேபோல மின்விசிறி பயன்படுத்துவோர், மின்விசிறிகளைப் பயன்படுத்தும் போது ஜன்னல்கள் ஓரளவு திறந்திருக்க வேண்டும் எனவும், அறையின் காற்றோட்டத்தை மேம்படுத்த எக்ஸ்சாஸ்ட் ஃபேனை பயன்படுத்தலாம் எனவும்மத்திய அரசுஅறிவுரைகளை வெளியிட்டுள்ளது.