மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆனந்த் போஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஆனந்த் போஸை நியமனம் செய்து இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் இல.கணேசன் மேற்கு வங்கத்தின் ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.