உத்தரபிரதேசம், மேற்குவங்கம், திரிபுரா, மத்தியபிரதேசம், பீகார், நாகலாந்து ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மத்தியப் பிரதேச ஆளுநரான ஆனந்திபென் படேல் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரபிரதேச ஆளுநராகவும், மேற்கு வங்க ஆளுநராக ஜகதீப் தங்கரும், திரிபுராவின் ஆளுநராக ரமேஷ் பைஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பீகார் ஆளுநரான லால் ஜி டாண்டன் மத்தியப் பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக பாகு சவுகானாக் பீகார் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல நாகாலாந்து ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படுகிறார். உத்தரபிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில் இந்த ஆளுநர் மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.