Advertisment

ஸ்டேட் பாங்க் வழங்கும் எலெக்ட்ரானிக் சிப் ATM கார்டுகள்... எதற்கு தெரியுமா?

SBI

ஏ.டி.எம். கார்ட் மூலமாக மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில், எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட 'டெபிட் மற்றும் க்ரெடிட்' கார்டுகளை மட்டுமே வழங்க வேண்டும் என்று ரிசர்வ்வங்கி(ஆர்.பி.ஐ) உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில்எஸ்.பி.ஐ. வங்கி புதிதாக எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை விநியோகித்து வருகிறது. வாடிக்கையாளர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் பழைய கார்டுகளுக்கு பதிலாக புதிய சிப் பொருத்தியகார்டுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக எந்தத்தொகையும் வசூலிக்கப்படாது எனவும் எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது. இந்த நடைமுறையில் புதிதாக'டெபிட் மற்றும் க்ரெடிட்'கார்டுகள்விண்ணப்பிப்பவர்களுக்குஎலக்ட்ரோனிக் சிப் பொருத்திய கார்டுகளையே வங்கிகள் வழங்குகின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது. பழைய வாடிக்கையாளர்கள்மட்டுமே அவர்களது பழைய கார்டுகளுக்கு பதிலாக புதிய கார்டுகளை மாற்றிக்கொள்ள வேண்டும். நெட் பாங்கிங்மூலமாகவும் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.பி.ஐ. அறிவித்துள்ளது.

Advertisment
RBI SBI new EMV debit and credit card
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe