மலாய் தீபகற்பம் அருகே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
'புரெவி' புயல் பாம்பனை நெருங்கும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. ஏற்கனவே இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் நிவர், புரெவி என புயலாக மாறிய நிலையில் மேலும் ஒரு தாழ்வு பகுதி உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் புதிய புயலால் தமிழகத்திற்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.