தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்தநிலையில் வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

new cyclone in bay of bengal

Advertisment

Advertisment

கடந்த சில நாட்களில் ஆங்காங்கே மட்டும் லேசான மழை பெய்து வந்த சூழலில் அந்தமான் அருகே உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை மதியம் புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையயடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரயில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும், இன்று முதல் 7ம் தேதி வரை மீனவர்கள் வங்கக் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும்எச்சரிக்கப்பட்டுள்ளது.