new credit and debit card rules

Advertisment

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு தொடர்பான சட்டத்திருத்தத்தின் புதிய விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்பாடு தொடர்பாக ரிசர்வ் வங்கி அண்மையில் புதிய விதிமுறைகளை அறிவித்தது. அதன்படி, அனைத்து டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள், இந்தியாவில் உள்ள ஏடிஎம்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும், இந்தியாவுக்கு வெளியே பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிகளில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதேபோல, ஏடிஎம் மையங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு எவ்வளவு ரூபாய் வரை எடுப்பது என்ற பரிவர்த்தனை வரம்பை, வாடிக்கையாளர்களே நிர்ணயிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இதுதவிர, இதுவரை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படாத கார்டுகளின் ஆன்லைன் பரிவர்த்தனைகளும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மோசடிகளை பெருமளவு தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த விதிமுறை மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

Advertisment