Advertisment

இந்தியாவில் 70-ஐ தாண்டிய புதியவகை கரோனா பாதிப்பு!

health ministry

இங்கிலாந்தில் பரவிவந்த மரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனா, மற்ற நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்கள் சோதனை செய்யப்படுவதன் மூலம், இங்கும் புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

Advertisment

இந்தியாவில் ஏற்கனவே 58பேருக்குப் புதியவகை கரோனாதொற்று உறுதியான நிலையில், இன்று காலை மேலும் 13 பேருக்குப் புதியவகை கரோனாதொற்று உறுதிசெய்யப்பட்டு, புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.தற்போது மேலும் இரண்டு பேருக்குபுதிய வகை கரோனாஉறுதி செய்யப்பட்டதால், தற்போது இந்தியாவில்கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இதுவரை டெல்லியின்(இரண்டு) ஆய்வகங்களில் 28 பேருக்கும், புனே ஆய்வகத்தில் 30 பேருக்கும், பெங்களூரு ஆய்வகத்தில் 11 பேருக்கும், ஹைதராபாத்ஆய்வகத்தில் ஒருவருக்கும், கொல்கத்தா ஆய்வகத்தில் ஒருவருக்கும் என புதியவகை கரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது.

India new strain covid united kingdom
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe