ADVERTISEMENT

40 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கு கீழ் குறைந்தது!

04:17 PM May 25, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் புதிதாக 1,96,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,511 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாகப் பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றிலிருந்து நேற்று ஒரே நாளில் 3,07,311 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

ADVERTISEMENT

நாடு முழுவதும் இதுவரை 2.39 கோடி பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமாகியுள்ளனர். இந்தியாவில் தற்போது 25 லட்சம் பேர் கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து வருகிறார்கள். கடந்த 40 நாட்களுக்குப் பிறகு இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது. பாதிப்பு ஒருபுறம் குறைந்து வந்தாலும் உயிரிழப்பு இதுவரை இல்லாத அளவாகக் கடந்த சில நாட்களாக அதிகமாகப் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT