ghj

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை 15 கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 32 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்தியாவைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கரோனா மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,57,229 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 3,449 பேர் இந்த நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். நோய்த் தொற்றில் இருந்து 3,20,289 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கடந்த சனிக்கிழமை 4 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு கடந்த மூன்று நாட்களாகப் படிப்படியாகக் குறைந்து வருகிறது. அனைத்து மாநிலங்களும் தீவிரமாகக் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.