
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவரின் திருவுருவ சிலைக்கு புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

மணவெளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டி - கடலூர் சாலையில் நோனாங்குப்பத்தில் உள்ள திருவள்ளுவரின் முழு உருவ சிலைக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கோ.கணபதி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தமிழர்களம் அமைப்பின் சார்பாக அதன் மாநில அமைப்பாளர் கோ.அழகர் தலைமையில் அவ்வமைப்பினர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செய்தனர்.
Follow Us