புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு!

cabinet ministers taking oath

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று (07.07.2021) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை ஆறு மணிக்கு இந்த புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதனையொட்டி,ஏற்கனவே பதவிவகித்து வந்த பல்வேறு மத்திய அமைச்சர்கள் தங்களது பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

இதனையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா, உள்ளிட்ட 43 பேர் இன்று குடியரசு தலைவர் மாளிகையில் பதவி ஏற்றனர். குடியரசு தலைவர் புதிய அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,உட்பட மத்திய அமைச்சர்களும், ஹர்ஷவர்தன், ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட முன்னாள் மத்திய அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

புதிதாகப் பதவியேற்ற மத்திய அமைச்சர்களுக்கான துறைகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Narendra Modi UNION CABINET
இதையும் படியுங்கள்
Subscribe