Skip to main content

''காங்கிரஸில் புது ரத்தம் பாய்ச்சப்படும்... ஆனால் காங்கிரஸையும் நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது''-நாராயணசாமி பேட்டி

Published on 17/10/2022 | Edited on 17/10/2022
nn

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நாராயணசாமி பேசுகையில், ''காங்கிரஸ் கட்சியையும் நேரு குடும்பத்தையும் பிரிக்க முடியாது. எப்படி மகாத்மா காந்திக்கு பிறகு பண்டிதர் நேருவும், சோனியா காந்தியும், அவருக்குப் பிறகு ராஜீவ் காந்தியும், அவருக்கு பிறகு சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சிக்காகவும், இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதேபோல் அவர்களின் வழிகாட்டுதலோடு இந்த இருவரில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்கள்,  சோனியா காந்தி, ராகுல் காந்தி  வழிகாட்டுதலுடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

இப்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு புதிய ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்திருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு அகில இந்திய காங்கிரஸ் கட்சியினு டைய தலைவர் தேர்தல் முடிந்த பிறகு 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். அதன் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அறிவிக்கப்படுவார். அதன் பிறகு பல மாநிலங்களில் மாற்றம் ஏற்படும். மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மாற்றப்படுவார்கள். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் இந்த தலைவர் தேர்வு உறுதி செய்யப்படும். அதேபோல் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களும் உறுதி செய்யப்படுவார்கள். காங்கிரஸ் கட்சி ஜனநாயக முறையில் தேர்தல் நடத்துகின்ற காரணத்தால் காங்கிரஸில் அடிப்படையிலிருந்து ஜனநாயகம் தழைத்தோங்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்