new ayurvedic medicine for corona by patanjali

கரோனா வைரஸை அழிக்கக்கூடிய ஆயுர்வேத மருந்தினை கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.

Advertisment

கரோனா வைரஸை அழிக்கக்கூடிய மருந்தினை கண்டறிய உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் சித்தா, ஆயுர்வேத ஆகியவற்றிலும் இதற்கான மருந்துகள் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் கரோனா வைரஸை கட்டுப்படுத்தக்கூடைய ஆயுர்வேத மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளதாகப் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மருந்தைக் கரோனா பாதித்தவர்களுக்குக் கொடுத்து சோதித்துப் பார்த்ததில் ஐந்து முதல் பதினான்கு நாட்களில் கரோனா பாதிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆச்சார்யா பாலகிருஷ்ணா கூறுகையில், "கரோனா வைரஸ் பரவ தொடங்கியதுமே இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டோம். முதலில் சிமுலேஷன் செய்யப்பட்டது. பின்னர் கரோனா வைரஸை தாக்கி அழிக்கக் கூடிய நுண்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இந்த மருந்தை நூற்றுக்கும் மேலான கரோனா நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்துப் பார்த்தோம். அவர்கள் இந்த மருந்தின் மூலம் 100 சதவீதம் குணமடைந்தனர். எனவே, கரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆயுர்வேத மருந்து பலனளிக்கும் என்பதை நிச்சயமாக எங்களால் சொல்ல முடியும்" எனத் தெரிவித்துள்ளார்.