New attempt in history Supreme Court hearing live

வரலாற்றில் முதன் முறையாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி விசாரணை நேரலை.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு பெரும் நிலையில் அடுத்த உச்சநீதிமன்ற நீதிபதியாக யு.யு.லலித் என்பவரை பரிந்துரை செய்கிறார். அவர் நாளை ஜனாதிபதி திரௌபதி முர்மு முன்னிலையில் பதவியேற்பார்.

Advertisment

இந்நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு பெரும் நிலையில், . இன்று ஒரு நாள் அவர் விசாரிக்கும் வழக்குகள் இன்று நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. இதற்கான இணைப்பு உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கறிஞர்களின் வாதங்களும் அதற்கு நீதிபதிகளின் கருத்துக்களும் நேரலையில் அனைவரும் பார்க்கும் படி வழி செய்யப்பட்டுள்ளது. உலகில் எங்குஇருந்தாலும் உச்சநீதிமன்றத்தின் விசாரணைகளை நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment