nuclear deal

இந்தியாவின் வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அமெரிக்காவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தியா, அமெரிக்கா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பேச்சு வார்த்தை விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆண்ட்ரே தாம்சன் இடையே நடைபெற்றது. இதற்கு பின் செய்தியாளர்களுக்கு கூட்டாக அறிக்கை வெளியிட்ட அவர்கள், அந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அமெரிக்க அணு மின் நிலையங்கள் அமைப்பது உட்பட பாதுகாப்பு மற்றும் அணு தொழில்நுட்ப துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை பலப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது.

Advertisment